போதைப்பொருள் சம்பவத்துடன் தொடர்புடையதாக உறுதியான ஆதாரங்கள் இருந்தால் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் கைது செய்யப்படுவார் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யாமை தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனினும் ஆதாரம் இருந்தால் மட்டுமே அது நடக்கும், கூச்சலிடுவதால் அது நடக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சி.ஐ.டி. விசாரணைகளை மேற்கொண்டு, சரியான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் கைது செய்வேன் என தெரிவித்துள்ளார். அதிகாரங்கள் யாரையும் காப்பாற்றாது என அவர் தெரிவித்துள்ளார்.