போதைப்பொருள் கடத்தல்காரர்களின் 3 கோடி பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்!

பெமுல்ல பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர் என சந்தேகிக்கப்படும் நபருக்கு சொந்தமான மூன்று கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபரின் வீட்டில் இருந்து இரண்டு பயணிகள் போக்குவரத்து பஸ்கள், இரண்டு சிறிய லொறிகள், முச்சக்கர வண்டிகள், ஐந்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 65 அங்குல தொலைக்காட்சி பெட்டி என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த சொத்து என சந்தேகிக்கப்படும் இந்த வாகனங்கள் மற்றும் பொருட்களின் பெறுமதி மூன்று கோடி ரூபாவிற்கும் அதிகமாக இருக்கலாம் எனவும், இந்த சொத்துக்களின் உரிமையாளர்களான ஆணும் அவரது மனைவியும் குறித்த பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply