பேருந்துகளில் அதிக சத்தமாக பாடல்கள் போடுவதை முறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பேரூந்துகளால் ஏற்படும் சமூக ஒலி மாசுபாட்டை குறைக்கும் வகையில் எதிர்காலத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் சுற்றாடல் அமைச்சு இனைந்து வேலைத்திட்டமொன்றை தயாரிக்கவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், பேருந்துகளில் அதிக சத்தமாக பாடல்கள் போடப்பட்ட அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க பொலிசாருக்கும் அனுமதி இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.