தன்னுடன் இணைந்து கொள்ளுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு..!

நாட்டின் இலக்குகளை அடைவதில் தன்னுடன் இணைந்து கொள்ளுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

பதுளை குருத்தலாவ முஸ்லிம் தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஸ்திரமான பொருளாதாரத்தினை கட்டியெழுப்புதல் மற்றும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுதல் நாடு எதிர்நோக்கும் பிரதான இலக்குகள் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாட்டின் பிள்ளைகளின் சிறந்த எதிர்காலத்தினை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

Social Share

Leave a Reply