நீர் கட்டணம் செலுத்தப்படுவது சுமார் 15 % குறைவடைந்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
உண்டியல்கள் மூலம் சபைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 12 பில்லியன் ரூபா காணப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத கஜதீரஆராச்சி தெரிவித்துள்ளார்.
நீர் கட்டணத்தினை உடனடியாக செலுத்துவதன் மூலம் தேவையற்ற துண்டிப்புகளை தவிர்த்துக்கொள்ள முடியும் என அவர் அறிவித்துள்ளார்.