ரயில் தடம் புரள்வு காரணமாக மலையக மார்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் பதுளை மற்றும் ஹாலிஎல ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று காலை தடம் புரண்டுள்ளது.
இந்நிலையில், தடம்புரண்டுள்ள ரயிலினை மீள தடமேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.