வற் வரி அதிகரிப்பு காரணமாக அடுத்த வருடம் முதல் மதுபானங்களின் விலையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதிய விலைத்திருத்தம் எதிர்வரும் 2024 ஜனவரி 1ம் திகதி முதல் அமலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 750 மி.லீ மதுபான போத்தல் ஒன்றின் விலை 90 ரூபாவினாலும், 375 மி.லீ மதுபான போத்தல் 50 ரூபாவாலும், 180 மி.லீ மதுபான போத்தல் மதுபான போத்தல் ஒன்றின் விலை 20 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.