நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் 1,182 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
44 சந்தேகநபர்கள் தப்பு உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் போதைக்கு அடிமையான 47 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படையின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 138 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசேட நடவடிக்கையின்போது, 287 கிராம் ஹெராயின், 246 கிராம் ஐஸ், கஞ்சா 05 கிலோ 400 கிராம், 19,052 கஞ்சா செடிகள், மாவா 104 கிராம், உள்ளிட்ட மேலும் சில போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.