ஒரு கோடிக்கும் அதிக பெறுமதி கொண்ட போதைப்பொருட்கள் மீட்பு!

சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று 11 பொதிகளில் வந்த ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபா சந்தை பெறுமதி கொண்ட போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

இவை நேற்று (04.01) மாலை கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

கொழும்பு, நுகேகொட, பாணந்துறை, அனுராதபுரம் மற்றும் கண்டி ஆகிய இடங்களில் அமைந்துள்ள போலி முகவரிகளுக்கு இங்கிலாந்து மற்றும் ஜேர்மனியில் இருந்து இந்தப் பொதிகள் அனுப்பப்பட்டதாக அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பொதிகளில் 1,055 எக்ஸ்டசி அல்லது மெத்தம்பெட்டமைன் மாத்திரைகள், 318 கிராம் “குஷ்” எனப்படும் கஞ்சா மற்றும் 15 கஞ்சா விதைகள் இருந்துள்ளன.

கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் கடமையாற்றும் தபால் திணைக்கள ஊழியர்களும் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கைக்கு தங்கள் ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் கையிருப்பு மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply