சுற்றுலாத்தளமான சீகிரியாவை பார்வையிடச் செல்லும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் VAT செலுத்த வேண்டியுள்ளமை குறித்து; விசனம் தெரிவிக்கின்றனர்.
கலாசார முக்கோணத்தின் கீழ் கட்டுப்படுத்தப்படும் சிகிரியா உள்ளிட்ட தொல்பொருள் இடங்களுக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பற்றுச் சீட்டுகளுக்கு பெறுமதிசேர் வரி அறவிடப்படாவிட்டாலும், கடந்த முதலாம் திகதி முதல் 18 வீத VAT சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுமார் 30 அமெரிக்க டொலர்களை செலுத்தி முதல் நாள் பயணச்சீட்டை வாங்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான செயற்பாடுகள் நியாயமற்றது என சுற்றுலா பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும், உள்ளுர் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் 50 ரூபா பற்றுச்சீட்டும் 59 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பயணச் சீட்டுக் கட்டணமாக அதிகப் பணம் அறவிடப்படுவதால் இலங்கையின் சுற்றுலாத்துறையில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ள நிலையில் கலாசார முக்கோணத்தால் 18 வீத வரித் தொகையை அரசிடம் செலுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. .
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அந்த நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கலாசார முக்கோணத்தால் உரிய வரித் தொகை செலுத்த வேண்டியுள்ளமையினால் குறித்த நிறுவனத்திற்கு வருடமொன்று ஒரு பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.