வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் பெற்றுக்கொண்ட கடன்களை அனுமதியினடிப்படையில் எதிர்வரும் டிசம்பர் 31 வரை கட்டும் காலமாக நீடிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் மத்திய வங்கிக்கு கீழ் இயங்கும் வணிக நிறுவனங்களுக்கு மத்திய வங்கி இந்த அறிவித்தலை வழங்கியுள்ளது. தற்போதைய கொரோனா இடர் காலத்தில் பலரும் வருவாயை இழந்துள்ள நிலையில் மத்திய வங்கி இந்த முடிவினை எடுத்துளளது. கடன்களை பெற்றவர்கள் வங்கியிலோ வணிக நிறுவனங்களிலோ நீங்கள்வே அனுமதியினை பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதனை மனதில் வைத்து செயற்படவேண்டும். சாதாரண முறையில் இந்த சலுகை கிடைக்கும் வாய்ப்புகளில்லை.