பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக அந்நாட்டின் கல்வி அமைச்சராக பணியாற்றிய கேப்ரியல் அட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.
34 வயதுடைய அவர் பிரான்சின் இளைய பிரதமர் என்ற அங்கிகாரத்தைப் பெற்றுள்ளார்.
எலிசபெத் போர்ன் பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பின்னர் அந்தப் பதவிக்கு கேப்ரியல் அட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.
எலிசபெத் போர்ன் இரண்டு வருடங்களுக்கும் குறைவான காலம் பதவியில் இருந்ததுடன், எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பிற்கு முன்னதாகவே பதவி விலகியதையடுத்து, இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.