போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
திருகோணமலை குற்றத்தடுப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சுகவீனம் என காரணம் காட்டி, சேவைக்கு சமூகமளிக்க தவறியுள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.