அனைத்து பயணிகள் போக்குவரத்து சேவை பேருந்துகளிலும் சிசிடிவி கெமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எதிர்காலத்தில் அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு அறிவிக்கப்படும் என ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுப் பயணிகள் போக்குவரத்துச் சேவைகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க இந்த நடவடிக்கை பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொது போக்குவரத்துச் சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் வருடாந்த அனுமதிப்பத்திரத்தில் கெமராக்கள் பொருத்துவதை அத்தியாவசியமான ஒன்றாக உள்ளடக்குவது தொடர்பில் பொறுப்பான தரப்பினருக்கு தகவல் அனுப்புவதில் கவனம் செலுத்தியுள்ளோம் என ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.