சுகாதார அமைச்சருக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு..!

தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோர் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த முறைப்பாடு தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Share

Leave a Reply