கொழும்பு ஆனந்தா கல்லூரி மற்றும் நாலந்தா கல்லூரிகளுக்கு இடையேயான 94வது கடினபந்து கிரிக்கெட் போட்டி எதிர்வரும் மார்ச் 2 – 3ம் திகதிகளில் கொழும்பு SSC கிரிக்கெட் மைதானத்தில் நடாத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு தொடர்பிலான ஊடக சந்திப்பு கடந்த புதன்கிழமையன்று (10.01) SSC கழக உள்ளரங்கில் நடைபெற்றது.

இதில் பிரதான அதிதிகளாக முன்னாள் இலங்கை அணியின் தலைவர் அர்ஜுனா ரணதுங்க , மஹேல ஜெயாவார்த்தன , ICC நடுவர் குமார் தர்மசேன , முன்னாள் இலங்கை அணி வீரர் ரோஷன் மஹாநாம உட்பட முன்னாள் வீரர்கள் பலரும், இரு பாடசாலைகளினதும் முன்னாள் மாணவர்களும் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பின்போது இத்தொடருக்கான LOGO அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

