செபாஸ்டியன் கிரிக்கெட் கழகம் மற்றும் பதுரெலிய கிரிக்கெட் கழகம் அணிகளுக்கிடையில் நேற்று (13.01) மேயர் லீக் கிரிக்கெட் தொடரின் 1 ஆவது அரை இறுதிப்போட்டியாக கொழும்பு நொதன்ஸ்க்ரிப்ட்ஸ் கிரிக்கெட் கழகம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் செபாஸ்டியன் அணி 10 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற செபாஸ்டியன் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய பதுரெலிய அணி 42.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 108 ஓட்டங்களை பெற்றது. இதில் ரொஹான் சஞ்சய 27(50) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் இசித்த விஜேசுந்தர, சரித் ராஜபக்ஷ, தரிந்து ரத்னாயக்க ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் துஷான் விமுக்தி, சமிக்கார எதிரிசிங்க, ப்ரொமோட் மதுவந்த ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய செபாஸ்டியன் அணி 22.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 112 ஓட்டங்களை பெற்றது. இதில் துலின டில்ஷான் ஆட்டமிழக்காமல் 53(65) ஓட்டங்களையும், நவிந்து விதானகே ஆட்டமிழக்காமல் 53(70) ஓட்டங்களையும் பெற்றனர்.
கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் மற்றும் சின்ஹலீஸ் விளையாட்டுக் கழகம் அணிகளுக்கிடையில் இன்று (14.01) மேயர் லீக் கிரிக்கெட் தொடரின் 2 ஆவது அரை இறுதிப்போட்டியாக கொழும்பு நொதன்ஸ்க்ரிப்ட்ஸ் கிரிக்கெட் கழகம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த பொட்டில் SSC அணி 6 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற SSC அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய கோல்ட்ஸ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 236 ஓட்டங்களை பெற்றது. இதில் ஹஷான் துமிந்து 63(96) ஓட்டங்களையும், ரவிந்து ரசந்த 40(49) ஓட்டங்களையும், ஷெரான் பொன்செக்கா 38(51) ஓட்டங்களையும், முதித்த லக்ஷன் 36(44) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய, நுவனிது பெர்னாண்டோ, சமிந்து விக்ரமசிங்க ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய SSC அணி 47 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 240 ஓட்டங்களை பெற்றது. இதில் அவிஷ்க பெர்னாண்டோ ஆட்டமிழக்காமல் 125(138) ஓட்டங்களையும், கிரிஷான் சஞ்சுல 58(80) ஓட்டங்களையும், ரணுத சோமரத்ன ஆட்டமிழக்காமல் 32(42) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் யசிரு ரொட்ரிகோ, உதித் மதுஷான், அகில தனஞ்சய, முதித்த லக்ஷன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.