பரீட்சை வினாத்தாளை வெளியிட்ட ஆசிரியர் கைது!

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் வினாத்தாளை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பிய குற்றச்சாட்டில் அம்பாறை பிரதேசத்தில் உள்ள பிரபல அரச பாடசாலை ஒன்றின் உயர்தர விவசாய விஞ்ஞான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாட வினாத்தாள் முதலாம் பாகத்தை சந்தேகநபர் கடந்த 8 ஆம் திகதி வெளியிட்டுள்ளதுடன், இரண்டாம் பாகத்தை கடந்த 10ம் திகதி வெளியிட்ட்டுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

Social Share

Leave a Reply