வௌவால்களில் பரவி மனிதர்களை தாக்கக் கூடிய மோசமான வைரஸ் குறித்து தாய்லாந்து விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாய்லாந்து விவசாயிகள் நெல் வயல்களில் உரமாகப் பயன்படுத்தப்படும் குவானோவை சேகரிக்கும் குகைகளில் வசிக்கும் வெளவால்கள் மத்தியில் இந்த வைரஸ் கண்டறியப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், தாய்லாந்து விஞ்ஞானிகள் அந்நாட்டின் வௌவால்கள் மத்தியில் பரவும் வைரஸ் குறித்து உன்னிப்பாக கவனம் செலுத்தி வருகின்றனர்.
கோவிட் பரவல் தொடர்பில் மீண்டும் பரிசோதனைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே இந்த வைரஸ் தொடர்பிலும் அவதானிக்கப்பட்டுள்ளது.