புதிய மாற்றுதிறனாளிகளை தொழில் பயிற்சி நிலையங்களுக்கு அனுமதித்தல் நிகழ்வு!

திருகோணமலை மாவட்டத்தில் 2023 நடைபெற்ற தொழில் பயிற்சி நிலையங்களுக்கான நேர்முக பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட மூதூர் மற்றும் கிண்ணியா பகுதிகளிலுள்ள செவிபுலன் குறைபாடு உடைய இரண்டு மாற்றுத்திறனாளிகளை கண்டியில் அமைந்துள்ள கட்டவெல தொழில் பயிற்சி நிலையத்திற்கு இன்று (16.01) திருகோணமலை மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் வழிகாட்டுதலுக்கிணங்க திருகோணமலை மாவட்ட செயலக சமூக சேவைகள் பிரிவினால் உட்சேர்க்கப்பட்டதாக திருகோணமலை மாவட்ட ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் சமூக சேவைகள் மாவட்ட இணைப்பாளர் த.பிரணவன், அங்கவீனமுற்ற தேசிய செயலகத்தின் மாவட்ட இணைப்பாளர் ம.துவாரகன் மற்றும் பிரதேச செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply