வட- மத்திய நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த படகு போர்கு பகுதியிலிருந்து கெப்பி பகுதியில் உள்ள சந்தைக்கு பயணிகளை ஏற்றிச் சென்றபோது அதிக பாரம் காரணமாக நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மேலும் 100 பேர் காணாமற்போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் காணாமற் போனோரை தேடும்; பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏழு மாதங்களில் நைஜீரியாவில், அதிகளவான படகு விபத்துக்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.