பாராளுமன்றில் அமளிதுமளி

ஐக்கிய மக்கள் சக்தியினர் நேற்றைய தின (16/11) அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து இன்றைய தினம் (17/11) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது மீண்டும் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளனர்.

பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி உறுப்பினர்கள், ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்த வேளை, பொலிஸார் அதில் தலையிட்டு செயற்பட்ட விதம் தொடர்பில் தமது எதிர்ப்பினை தெரிவித்து பதாதகைகளை ஏந்திய வண்ணம் அவர்கள் பாராளுமன்றில் எதிர்ப்பினை வெளியிட்டனர்.

Social Share

Leave a Reply