தங்காலை, பெலியத்த பிரதேசத்தில் இன்று (22.01) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் ”அபே ஜனபல” கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் அடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று காலை 8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை நிற டிஃபென்டர் ரக வாகனத்தில் பயணித்த 5 பேரை இலக்கு வைத்து கெப் வண்டியில் வந்த சிலர் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.