ஜனாதிபதியினதும் பிரதமரினதும் அடிமைகள் நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தினை அர்த்தமற்றதாய் மாற்றியுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 72 ஆவது கட்டமாக, மாளிகாவத்தை தருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
பாராளுமன்ற முறைப்படி, இந்த சட்டம் மற்றும் அதன் திருத்தங்கள் தொடர்பான அறிக்கை,துறைசார் மேற்பார்வைக் குழுவின் அமர்வில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
திறமை,கல்வி அறிவு இல்லாமல் செயல்படுத்தப்படுகின்றன என்பது இந்த அறிக்கையிலிருந்து தெளிவாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட வங்குரோத்து நிலையில்,நாட்டின் குடிமக்கள், குழந்தைகள்,தாய்மார்கள் என சகலரும் பல சவால்களை எதிர்கொண்டுள்ள இவ்வேளையில்,வாழ்க்கை செலவு பாரியளவில் அதிகரித்துள்ளதாகவும் எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.