இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலறியும் உரிமை சட்டத்தின் 11ஆம் பிரிவின் கீழ் குறித்த சட்டத்தின் செயற்பாட்டை கண்காணிக்கும் மற்றும் அமுல்படுத்தும் பிரதான நிறுவனமாக உள்ளது. குற்றமிழைக்கும் உத்தியோகத்தர்களுக்கு எதிரான, ஒட்டியொழுகாமை மீதான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை சிபார்சு செய்வதற்கும் அதிகாரங்களைக் கொண்டுள்ள ஒரு நியாதிக்க சுயாதீனசபையாக இது உள்ளது. சட்டத்தில் வரைவிலக்கணம் செய்த குற்றங்களைச் செய்தவர்களை (பிரிவுகள் 15இ38(2) மற்றும் 39(4))சட்டத்தின் முன் நிறுத்த அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
அரசியலமைப்புச் சபையின் சிபார்சின் பேரில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒரு தலைவரையும், 4 உறுப்பினர்களையும் அங்கத்தவர்களாககொண்டுள்ளது. இந்த ஆணைக்குழுவிற்கு 1) இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் 2) ஊடக நிறுவனங்கள், மற்றும் 3) ஏனைய சிவில் சமூக நிறுவனங்கள் (பிரிவுகள் 12 (1))ஆகியவற்றல் சிபாரிசு செய்யப்பட்ட தலா ஒருவரையும் நியமிப்பதற்கு அரசியலமைப்பு சபை கடமைப்பட்டுள்ளது.
சிபார்சு செய்யப்படும் நபர்கள் பொதுவாழ்வில் மதிப்பிற்குரியவர்களாக இருப்பதுடன், அரசியல், அரச துறை அல்லது நீதித்துறை அல்லது வேறு ஏதும் இலாபகரமான அலுவலகம் என்பவற்றுடன் அல்லது வேறு ஏதும் அரசியல் கட்சிகளுடன் தொடர்பற்ற இலாப நோக்கம் கொண்ட தொழில்வாண்மை அல்லது ஏதும் தொழிலை மேற்கொள்பவராக இல்லாது அனுபவமிக்கவராக இருக்க வேண்டும் (பிரிவு 12(2)).
ஆணையாளர்களின் பதவிக்காலம் 5 வருடங்களாக இருப்பதுடன் தகவலறியும் உரிமைச்சட்டத்தின் 12(6) பிரிவின் கீழ் விதிவிலக்களிக்கப்பட்டுள்ள தகவல்களை வெளியிடாதிருக்கவும் கடமைப்பட்டுள்ளார்கள் (பிரிவு 12(7)).
ஆணைக்குழுவானது ஒரு பணிப்பாளர் நாயகத்தையும் ஏனைய உத்தியோகத்தர்களையும் தேவையான பணியாளர்களையும் நியமிக்கும். ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அதன் நிறைவேற்று அதிகாரியாக விளங்குவார் (பிரிவு 13).
ஆணைக்குழு பாராளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் அதற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை கொண்டு செயற்படுவதுடன் அதற்கு கிடைக்கும் நன் கொடைகள், அன்பளிப்புக்கள் அல்லது மானியங்கள் மட்டும் வெளிநாட்டு மூலங்களில் இருந்து கிடைக்கும் நிதி ஆகியன ஆணைக்குழுவின் கணக்கில் வரவு வைக்கப்படும் (பிரிவு 16 (1)).
நோக்கு
தகவலறியும் உரிமையை இலங்கை பிரஜைகள் வினைதிறனான முறையில் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்வது.
பணி நோக்கு
வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சியின் இணைந்ததாகஅனைத்துஅரச அதிகாரிகளினதும் செயற்பாடுகளை கண்காணித்தல் மற்றும் செயல்விளைவுடன் நீதியின் முன்கொண்டு செல்லுதல் ஊடாகவும், பிரசைகள் தமக்கு தேவையான தகவல்களை அறிந்துகொள்ளக்கூடிய சூழலை உருவாக்குவதன் மூலம் இலங்கை பிரசைகள் அனைவருக்கும் தகவல் அறியும் உரிமையை உறுதி செய்தல்.
இலக்குகள்
- வேண்டுகோள்களை செயன்முறைப்படுத்துவதற்கு இயலச் செய்யும் ஏற்பாடுகளை ஊக்குவித்தல்: மேன்முறையீடுகள் தொடர்பாக ஒழுங்குகளை உருவாக்குதல், விசாரணைச் செயன்முறைகள், தகவல் வழங்குவதற்கான கட்டண அட்டவணை மற்றும் அறிக்கை வடிவொழுங்குகள்,தகவலறியும் உரிமை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு விளைவு கொடுக்கும் நோக்கத்திற்காக பணிப்புரைகளையும் வழிகாட்டுதல்களையும் பிரசுரித்தல், ஊடக அமைச்சால் முன்மொழியப்பட்ட ஒழுங்குவிதிகள் மீதான மதியுரை, ஆணைக்குழுவின் மேலோட்டப்பார்வை மற்றும் தீர்ப்பு வழங்கல் வகிபங்கை பகிரங்கப்படுத்தல்.
- செயல்விளைவுடைய தீர்ப்பு வழங்கல் மற்றும் அமுல்படுத்தல்: அரசாங்க அதிகாரிகளுக்கும் தகவல் கோருவோருக்கும் இடையிலான பிணக்குகளில் வினைத்திறனுடன்; தீர்ப்பு வழங்கல்.
- அரச உத்தியோகத்தர்களின் பயிற்சிகளுக்கு ஆதரவு வழங்குதல்: அரச உத்தியோகத்தர்களின் பயிற்சியில் கூட்டுழைப்பு, மற்றும் பங்காண்மையாளர்களுக்கான தகவல் அறியும் உரிமை மீதான விசேடித்த பயிற்சிகளில் ஆதரவளித்தல்.
- பொது விழிப்புணர்வை அதிகரித்தல்: ஆணைக்குழுவின் இணையத்தளம் மற்றும் ஏனைய ஊடகங்கள்ஊடாக தகவலறியும் உரிமைசட்டத்தினை குறித்து பொதுமக்களின் விழிப்புணர்வைஅதிகரித்தல்.
- ஆவண முகாமைத்துவத்தை முன்னேற்றுதல்: வழிகாட்டுதல்களின் வழியாக தகவல்கள் முகாமைத்துவம் மீதான நுணுக்கமான பணிப்புக்களை வழங்குதல்
- துடிப்பான செயற்பாட்டு வெளிப்படுத்துகையை அதிகரித்தல்: வழிகாட்டல்களை வழங்குவதன்மூலம்தகவல் வெளிப்படுத்துகையின் துடிப்பான செயற்பாட்டை வளர்த்துக்கொள்ளல், குறைந்தபட்ச நியமங்களை விதித்தல்,தற்போதைய சட்டங்களுக்கு மீளமைப்புக்களையும் காலத்திற்கேற்ப மதிப்பீட்டு அறிக்கைகளைவும் வழங்கல்
- செயல்விளைவுடைய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு முறைமையைநிறுவுதல்: பொருத்தமான இணையவழி தீர்வுகள் மற்றும் மதிப்பீட்டுக் கருவிகளை பயன்படுத்துவதன் ஊடாக அரச அதிகாரிகள் தகவலறியும் உரிமையை அமுல்படுத்துவதன் செயல்விளைவை கண்காணித்தலும் மதிப்பீட்டை மேற்கொள்ளலும்.