நேற்று முன்தினம் (22.01) பெலியத்த பகுதியில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கான பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பயன்படுத்திய கைப்பற்றப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மாத்தறை பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியின் மேற்பார்வையில் ஹக்மன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழு நடத்திய விசாரணையில், இலங்கையில் இருந்து இந்த குற்றத்திற்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் சமன் குமார என்ற 54 வயதுடைய ஒருவர், மற்றும் இதற்கு பயன்படுத்தப்பட்ட வந்த 65-2615 இலக்கம் கொண்ட மிட்சுபிஷி பெஜேரோ ஜீப்பும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.