இலங்கை அணிக்கு இலகு வெற்றி

இலங்கை மற்றும் நமீபியா அணிகளுக்கிடையில் இன்று (24.01) 19 வயதிற்குட்பட்ட உலகக்கிண்ணத்தின் 12 ஆவது போட்டி கிம்பெர்லீயில் நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி 77 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக இலங்கை அணி கிட்டத்தட்ட அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நமீபியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 37.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 133 ஓட்டங்களை பெற்றது. இதில் சுபுன் வடுகே ஆட்டமிழக்காமல் 56(79) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் சாச்சியோ வன் வியூரன் 4 விக்கெட்களையும், ஜோஹன்னஸ் டி வில்லியர்ஸ் 3 விக்கெட்களையும், பீட்டர் டானியல் பிலிக்நௌட், ஜக் ப்ரஸ்ஸல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய நமீபியா அணி 27 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 56 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. துடுப்பாட்டத்தில் யாரும் சரியாக பிரகாசிக்கவில்லை. பந்துவீச்சில் விஷ்வ லஹிரு, ருவிஷன் பெரேரா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், டினுற கழுபஹான 2 விக்கெட்களையும், கருக சங்கெத் 1 விக்கெட்டினையும் கைப்பற்றினார்கள்.

இந்த போட்டியின் நாயகனாக சுபுன் வடுகே தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply