‘விரைந்து தீர்வை பெற்றுத் தாருங்கள்’ – மைத்திரி

நாட்டில் வாழும் பொதுமக்களில் 17% பேர் மந்தபோசனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று (17/11) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சின் தரவுகளுக்கு அமைய நாட்டில் குருதி சம்பந்தப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையே உயர்வடைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர் மேல் மாகாணத்தில் அதிகூடிய சிறுநீரக நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் அநுராதபுர புற்றுநோய் வைத்தியசாலையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,000 ஆகவும், சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை 20,000 ஆகவும் அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், அவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்றும் தெரிவித்தார்.

ஆகையால் தீவிரமடைந்துள்ள இந்த பிரச்சினை குறித்து அரசாங்கம் தலையிட்டு தீர்வொன்றை பெற்றுத்தர வேண்டுமென மைத்திரிபால சிறிசேன சபையில் வலியுறுத்தினார்.

'விரைந்து தீர்வை பெற்றுத் தாருங்கள்' – மைத்திரி

Social Share

Leave a Reply