காஸா பகுதியின் கான் யூனிஸ் என்ற இடத்தில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 9 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக பதிவாகியுள்ளதுடன், காயமடைந்தவர்களில் ஏராளமாவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பாலஸ்தீன அகதிகள் அமைப்பின் தலையீட்டின் மூலம் காஸாவில் வசிக்கும் பாலஸ்தீனியர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதற்காக இந்த அகதிகள் முகாம் நிறுவப்பட்டிருந்ததாகவும், அது ஹமாஸ் தீவிரவாதிகளின் தளம் என்று கூறி இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.