இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் காலமானார்..!

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல் நலக்குறைவால் சற்றுமுன் காலமானர்.

அவர் பித்தப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கொழும்பு லங்கா வைத்தியசாலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது உடலை நாளை சென்னை கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பாடகி பவதாரிணி இளையராஜா இசையமைத்த ராசய்யா படத்தில் மூலம் முதன் முதலாக இசைத்துறைக்குல் அறிமுகமானார். பாரதி பாடத்தில் மயில் போல பொண்ணு என்ற பாடலை பாடியதற்காக பவதாரிணிக்கு தேசிய விருதை பெற்றுக்கொண்டதுடன், காதலுக்கு மரியாதை, ப்ரண்ட்ஸ் படத்தில் பாடல்களை பாடியுள்ளார்.

காற்றில் வரும் கீதமே, ஒளியிலே தெரிவது தேவதையா, என் வீட்டுச் சன்னல், தாலியே தேவை இல்லை போன்ற பாடல்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.

சமூக வலைத்தளங்களில் இளையராஜாவின் ரசிகர்கள் பலரும் பவதாரிணி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Social Share

Leave a Reply