முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டிசில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியினர் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான முஜிபுர் ரஹ்மானும் கலந்து கொண்டிருந்த நிலையில் சுகவீனமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.