அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லை – சஜித் கடும் விசனம்..!

தேர்தல் மூலமே நாம் ஆட்சிக்கு வருவோம் எனவும் தற்போதைய அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பு விகாரமகாதேவி பூங்கா பிரதான நுழைவாயில் முன்பாக அவர் பேரணி உரை ஆற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் முதுகெலும்பு இருந்தால் தேர்தல் ஒன்றை நடாத்துங்கள் எனவும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பித்த பாதைகளில் பேரணி நடாத்தப்படவில்லை எனவும் நாம் சட்டத்தை மீறி செயற்படவில்லை எனவும் சஜித் பிரேமதாச இதன்போது சுட்டிகாட்டினார்.

அரசியல் ரீதியிலான வழிகளில் இல்லாது மக்களின் தீர்ப்பு மற்றும் ஆசிர்வாத்தின் ஊடாகவே ஆட்சிக்கு வருவோம் என்பதை ரணில் ராஜபக்ச அரசாங்கத்திடம் தாம் கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு கருத்து தெரிவித்தார்

“மக்களுக்கு பயந்த அரசாங்கம், இன்று காலை ரணில் ராஜபக்ச அரசாங்கத்தின் சில கைபொம்பைகள் நீதிமன்றம் சென்று, சில பிரதேசங்களுக்கு தடையுத்தரவுகளை கோரினர். ஆனால் நாங்கள் சென்றது, நாங்கள் வீதியில் பேரணி சென்றது, சட்டத்தை மீறியல்ல. தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அல்ல. நாங்கள் சட்டத்தை மீறவில்லை. இவ்விடத்திற்கு ஒன்று திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவேரணில் ராஜபக்ச அரசாங்கத்தின் ரணிலுக்கும் மஹிந்தவிற்கும் முதுகெலும்பு இருந்தால் மக்கள் மத்தியில் வருமாறு அழைப்பு விடுக்கிறோம்”

ரணில்-ராஜபக்ச அரசாங்கம் கண்ணீர் புகையை கொண்டு தாக்குதல் நடத்தினர். ஆனால் நாங்கள் தாக்குதல் நடத்துவது வெடி குண்டு,வாள்,மெஷின் கன் துப்பாக்கி மூலம் அல்ல.தேர்தல் ஊடாக நாம் அரசாங்கத்திற்கு பாடம் புகட்டுவோம். இதுதான் அரச பயங்கரவாத்தின் அடையாளமாகும். அடக்குமுறை, மிலேச்சத்தனம் மூலம் அரசாங்கம் மக்களை அதல பாதாளத்தில் தள்ளியுள்ளது. எனவே இந்த மோசமான அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப 220 இலட்சம் மக்கள் தயாராகுங்கள்.நாங்கள் ரணிலுடனோ ராஜபக்சவுடனோ டீல் இல்லை. மேடையில் எதிராக பேசிவிட்டு இரவில் டீல் போடும் இரட்டை நிலைப்பாட்டையுடைய அணியல்ல ஐக்கிய மக்கள் சக்தி.

இன்று நடத்தப்பட்ட தாக்குதல் சட்டவிரோதமானது. போராடுவதற்கு அரசியலமைப்பில் எமக்கு உரிமை உள்ளது. வெட்கம்! வெட்கம்! ரணில் ராஜபக்ச அரசாங்கமே வெட்ககேடு”.

Social Share

Leave a Reply