மீண்டும் அதிகரிக்கிறது எரிபொருள் விலை!

இன்று (31.01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை திருத்தியமைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி 92 ரக பெற்றோல் 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 371 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டீசலின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 363 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் விலையும் 26 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 262 ரூபாவாகும்.

இதேவேளை, லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 4 ரகத்தின் விலை 08 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 456 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அத்துடன் லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லீற்றரின் விலை 07 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 468 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply