ஒரு இறாத்தல் மற்றும் அரை இறாத்தல் பாண் இருக்க வேண்டிய நிர்ணயிக்கப்பட்ட எடையைக் குறிப்பிடும் வர்த்தமானி அறிவிப்பொன்றை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஒரு இறாத்தல் பாணின் எடை 450 கிராம் ஆக இருக்க வேண்டும் என்பதுடன் மற்றும் அது 13.5 கிராம் அளவில் மாறுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரை இறாத்தல் பாணின் பரிந்துரைக்கப்பட்ட எடை 225 கிராம் ஆக இருக்க வேண்டும் என்பதுடன் அது தடிமன் 09 கிராம் அளவிற்குள் மாறுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி விற்பனை செய்யப்படும் பாணின் எடை தெளிவாகக் காட்டப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.