வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இளைஞன் ஒருவன் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நேற்று (16/11) இடம்பெற்று இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களுக்கு போலியான இலக்க தகடுகள் வடிவமைத்து வழங்கப்படுவதாகவும், அம்மோட்டார் சைக்கிள் இலக்கத் தகடுகளை பொருத்தி திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் முல்லைத்தீவு விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தாண்டிக்குளம் பகுதியிலுள்ள வாகன இலக்கத்தகடுகள் வழங்கும் நிலையம் ஒன்றும் சோதனை செய்யப்பட்டது.
இதன்போது குறித்த நிலையத்தில் கடமையாற்றிய இளைஞன் விசேட அதிடிப்படையினரால் கைது செய்யப்பட்டதுடன், அங்கு இருந்த கணினி மற்றும் வாகன இலக்க தகடுகள் என்பனவும் விசேட அதிடிப்படையினால் எடுத்து செல்லப்பட்டு வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.