“ சினிமா ஊடாக இரசிகர்களின் மனம் வென்ற விஜய், அரசியல் ஊடாகவும் மக்களின் மனங்களை வெல்லும் வகையில் செயற்படுவார் என்ற முழு நம்பிக்கை இருப்பதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
எனவே, விஜய் தலைமையிலான ”தமிழக வெற்றி கழகத்தின்” செயற்பாட்டாளர்களுக்கும், அங்கத்தவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மலையக மக்கள் சார்பிலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பிலும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.