கரையோர மார்க்கத்திலான ரயில் சேவைகளில் மாற்றம்..!

கரையோர மார்க்கத்திலான ரயில் சேவைகள் நாளைய தினம் சில பிரதான ரயில் நிலையங்களில் இடைநிறுத்தப்படமாட்டாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் 76 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களின் பங்குபற்றுதலுடன் விமர்சையாக நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்வில் ஜனாதிபதி உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ள நிலையில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டி ரயில் நிலையங்களில் அதிகாலை 05.00 மணி முதல் காலை 09.00 மணிவரை ரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply