ஒன்லைன் சட்டத்தில் மனித உரிமைகளை மீறும் வகையில் ஏதேனும் ஒரு பிரிவு இருந்தால் அதனை முன்வைக்குமாறு எதிர் தரப்புகளிடம் கோரிக்கை விடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்தார்.
அவ்வாறானதொரு சரத்து சுட்டிக்காட்டப்பட்டால் அந்த சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவரத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தாம் அறிந்தவரையில் மனித உரிமைகளை மீறும் வகையிலான எந்த சட்டமும் அதில் இல்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.