முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று உத்தரவிடப்பட்டது.
தரமற்ற இம்யூனோகுளோபியூளின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று காலை அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.
இதனையடுத்து, சுமார் 10 மணித்தியாலங்களுக்கும் மேலாக வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.