சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு – காந்திபூங்காவுக்கு அருகில் இன்று எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
முன்னதாக போராட்டத்தில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டிருந்ததாக கருதப்படும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக செயற்பாட்டளர்கள் உள்ளிட்ட 17 பேருக்கு எதிராக நீதிமன்றத்தினால் நேற்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், மட்டக்களப்பு கல்லடி பகுதியிலிருந்து ஆரம்பமான எதிர்ப்பு பேரணி, பொலிஸாரின் தடையையடுத்து, மட்டக்களப்பு அன்னை தெரேசா தேவாலயத்துக்கு அருகில் நிறுத்தப்பட்டு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது.
இதன்காரணமாக, கல்லடி – அரசடிக்கு இடையிலான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.