இலங்கையில் நடைபெறவுள்ள இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள் அடங்கிய தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி இன்று(04.02) ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ஹஸ்மதுல்லா ஷஹீதி, இப்ராஹிம் ஷர்டான், ரஹ்மத் ஷா, இக்ரம் அலிகில், நவீட் ஷர்டான், கெய்ஸ் அஹமட் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். இவர்களுடன் ரஹ்மனுள்ள குர்பாஸ், ரியாஸ் ஹசன், மொஹமட் நபி, குல்படின் நைப், அஸ்மதுல்லா ஓமர்ஷாய், நூர் அஹமட், முஜிபுர் ரஹ்மான், பஷல் ஹக் பரூக்கி. பரீட் அஹமட் இந்த குழுவில் இடம்பிடித்துள்ளார்கள்.
முதுகுப்புற சத்திர சிகிச்சையின் பின்னர் அதிலிருந்து குணமடைந்து வரும் ரஷீட் கான் இந்த அணியில் சேர்க்கப்படவில்லை.