இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு புதுடெல்லியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் இலங்கையின் தற்போதைய பொருளாதார சவால்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது