அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் மருந்தகங்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வடைந்துள்ள நிலையில், மருந்துகளும் விலைக் கட்டுப்பாடின்றி விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய 60 மருந்துகளின் 131 வகைகளின் விலைகளை ஒழுங்குபடுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், டொலரின் பெறுமதிக்கு அமைய கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் மருந்துகளின் விலையை 9 சதவீதத்தால் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.