கிளிநொச்சியில் பாண் நிறை தொடர்பாக விசேட சுற்றிவளைப்பு!

பாணின் நிறை தொடர்பாக இலங்கை பூராகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அந்தவகையில், கிளிநொச்சி நகரில் உள்ள பேக்கரிகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் கிளிநொச்சி மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினால் திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பானின் நிகர எடை மற்றும் விலை தொடர்பில் குறித்த சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். இதன்போது, 450 கிராம் அளவிற்கு குறைவான எடைகளில் பாண் உற்பத்தி செய்தமை மற்றும் விற்பனைக்கான விலையை காட்சிப்படுத்தாத மூன்று பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply