தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சற்று முன்னர் இதனை பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, சிகிச்சை பெற்றுவருவதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 11ஆம் திகதி முதல் கடும் காய்ச்சலுக்கு தான் உள்ளாகியுள்ளதாக மனோ கணேசன் அறிவித்திருந்த நிலையில் குறித்த காய்ச்சல் கொரனோ என உறுதியாகியுள்ளது.