யாழ்ப்பாணம் ‘முற்றவெளி’ விளையாட்டரங்கில் நேற்று (09.02) இரவு இடம்பெற்ற, பிரபல பாடகர் ஹரிஹரன், தென்னிந்திய திரைப்பட நடிகை தமன்னா, ரம்பா உள்ளிட்ட பல தென்னிந்திய கலைஞர்கள் பங்குபற்றிய இசைநிகழ்ச்சியை காண வந்த பார்வையாளர்கள் மத்தியில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த இசை நிகழ்ச்சியை பார்வையிட வந்தவர்கள் பொலிஸ் பாதுகாப்பையும் மீறி நிகச்சி இடம்பெற்ற மைதானத்திற்குள் நுழைய முற்பட்டதால் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த கைகலப்பு காரணமாக கலைஞர்கள் அசௌகரியத்திற்கு உள்ளதாகவும், பின்னர் பொலிஸாரின் தலையீட்டின் கீழ் மோதல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.