மரம் முறிந்து விழுந்ததில் படுகாயமடைந்த மற்றுமொரு குழந்தை மரணம்!

கம்பளை பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் மரம் முறிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு குழந்தை இன்று (10.02) உயிரிழந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை கம்பளை பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலை வளாகத்தில் மரம் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் காயமடைந்ததுடன், ஒரு குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பதிவாகியது.

ஏனைய இரண்டு பிள்ளைகளும் சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்திருந்தனர், கடந்த 05 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே இன்று காலை உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எத்கால பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply