250 மெகாவோட் காற்றாலை சக்தி மன்னாரில்..!

மன்னார் நகர் பிரதேச செயலகப் பிரிவில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 250 மெகாவோட் காற்றாலை சக்தி தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடல் மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

மேலதிக செயலாளர் இளங்கோ அவர்களின் தலைமையில் பல திணைக்களங்களின் தலைவர்களைக் கொண்ட குழுவினர், மன்னாரில் மேலும் காற்றாலை அமைக்கும் திட்டம் தொடர்பாக பொது அமைப்புக்களிலுள்ள பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதில் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு ஆளுநர் சபையினர் , மன்னார் அரசு சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் , மாவட்ட பொது அமைப்பின் பிரதிநிதிகள் என பல முக்கியஸ்தர்கள் இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

250 மெகாவோட் காற்றாலை சக்தி மன்னாரில்..!

இதன்போது மன்னாரில் தொடர்ந்தும் காற்றாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தபோதும் கலந்து கொண்ட மன்னார் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றன.

மேலும் மன்னாரில் காற்றாலை அமைப்பதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல எனவும் இந்த செயற்பாட்டினால் தீவு காணாமல் போகும் அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய மன்னார் மாவட்ட பிரதிநிதிகள் இவற்றை மன்னார் தீவுக்கு அப்பால் நிர்மாணிக்கும்படியும் அதற்கு ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் மன்னாரிலுள்ள மக்கள் இக்காற்றாலையினால் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வருடந்தோறும் வருகை தரும் அயல்நாட்டுப் பறவைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் போன்றவை கலந்துரையாடப்பட்ட போதிலும் இந்த திட்டத்தை எந்தக்காரணத்தினாலும் நிறுத்த முடியாது என தொடர்புடைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply