மீகொட பகுதியில் துப்பாக்கிச்சூடு!

மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொருளாதார நிலையத்திலுள்ள கடையொன்றில் நேற்று (11.02) இரவு கொள்ளையடிக்கும் நோக்கில் வந்தவர்களே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Social Share

Leave a Reply