சீனி ஊழல் மற்றும் மதுபான ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய நபர்களின் செல்வாக்கின் காரணமாகவே, பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இருந்து தாம் நீக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உரையை புறக்கணிக்க மறுத்தமையும், அவர் பதவி நீக்கப்பட்டமைக்கான காரணம் எனவும் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
சீனி ஊழல் மூலம் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் மதுபான போத்தல் ஸ்டிக்கர்களுடன் தொடர்புடைய மோசடியை வெளிக்கொண்டு வருவதற்கு, தெரிவுக்குழுவின் தலைவராக தாம் மேற்கொண்ட முயற்சிகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.